Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தொமுச தண்ணீர் பந்தல்…. அமைச்சர் நேரு திறந்தார்

கத்திரி வெயில் தாக்கமும், வெப்ப அலையும் தமிழ்நாட்டில் மக்களை வாட்டி வதைக்கிறது.  வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க  ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.  திருச்சி,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில்  தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.  இந்த தண்ணீர் பந்தலை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  இன்று திறந்து வைத்தார்.

திருச்சி மண்டல  தொமுச  பொதுச்செயலாளர் குணசேகரன் ஏற்பாட்டில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில்

தர்பூசணி, வெள்ளரி, இளநீர், நுங்கு, உள்ளிட்ட ஜூஸ் வகைகள் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் மத்திய மாவட்ட  திமுக செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!