Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கவும்…… ஒழுங்காற்று குழு பரிந்துரை

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில்   நேற்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 3.8 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டுள்ளது என்றும் மீதம் 6.2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது என்றும், ஜூன் மாதம் கர்நாடகா அரசு 9.17 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் அதனையும் கால தாமதம் இன்றி திறக்க கோரி தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

பின்னர் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதியாக, காவிரியில் மே மாத இருப்புப்படி 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. வரும் 21ம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டத்தில் இந்த பரிந்துரை எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் மீண்டும் மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதியாக எத்தனை டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!