Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு… காலி குடங்களுடன் மக்கள் அலையும் பரிதாபம்

டில்லியில் சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக உயர்ந்து உள்ளது. 50 டிகிரி செல்சியசிற்கும் கூடுதலாக வெப்பநிலை உயர்ந்துள்ள சூழலில், வெப்ப அலையும் மக்களை  வாட்டி வருகிறது. இதனால், பல்வேறு நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர்.

யமுனை ஆற்றில் நீர்மட்டமும் குறைந்து உள்ளது. கடுங்கோடையால் நீர் தேவையும் மக்களிடையே அதிகரித்து உள்ளது. இதனால், நீரை வீணாக்கினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வடக்கு மற்றும் தென்மேற்கு டில்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால், தண்ணீர் லாரிகளில் கொண்டு சென்று நீர் வழங்கப்படுகிறது. நகரத்தின் பல்வேறு பகுதிக்லை ளில் காலி குடங்கள், கேன்கள் உள்ளிட்டவற்றை தூக்கி கொண்டு மக்கள் தெருத் தெருவாக அலைகின்றனர்.

ஒரு சில இடங்களில் தண்ணீர் கருமையாகவும், துர்நாற்றம் வீசும் வகையிலும் உள்ளது. அதனால், குடிக்கவோ அல்லது சேமிக்கவோ, பிற தேவைகளுக்கு பயன்படுத்தவோ முடியவில்லை என  மக்கள் கூறுகிறார்கள். டில்லியில் நாள் ஒன்றுக்கு 1,290 மில்லியன் கேலன்கள் தண்ணீர் தேவையாக உள்ளது. ஆனால், 969 மில்லியன் கேலன்கள் அளவுக்கே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இனால், 321 மில்லியன் கேலன்கள்  தட்டுப்பாடு ஏற்பட்டு. கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். தண்ணீர் லாரியை கண்டதும் மக்கள் குடங்கள், கேன்களுடன் ஓடுகிறார்கள். தலைநகர் டில்லியில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!