Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி…

தனித்து போட்டியிட்டு சாதனை படைத்துள்ளது நாம் தமிழர் கட்சி. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கிட்சி மூன்றாம் இடம் பிடித்த தொகுதிகள்- கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை திருச்சி மற்றும் புதுவை ஆகிய தொகுதிகள்.. 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்ற தொகுதிகள் -சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், நாகை, தென்காசி மயிலாடுதுறை, திருவள்ளூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருச்சி, கிருஷ்ணகிரி இதில் அதிகபட்சமாக சிவகங்கையில் எழிலரசி 1,63,412 வாக்குகளைப் பெற்றார். இந்த தேர்தலில்  39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது. கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றிருந்தது. 12 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.  தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் அதனை பெற்றது நாம் தமிழர் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!