Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநில அளவில் 38 மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்விதுறை சார்பில் மாநில அளவிலான குடியரசுதின மற்றும் பாரதியார் பிறந்த நாள் தின விளையாட்டு போட்டிகள் கடந்த 19ந்தேதி முதல் கீழப்பழூரில் உள்ள தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. 38 மாவட்டத்தை சேர்ந்த 2660 மாணவ, மாணவிகள் சிலம்பம்,கேரம்,சாலை யோர மிதிவண்டி ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மிதிவண்டி போட்டி இன்று நடைபெற்றது. இதில் 14வயது , 17 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் என மூன்று பிரிவாக 198 பேர் கலந்து கொண்டனர். இதில் 14 வயதுக்குற்பட்ட பிரிவில் மதுரை மாவட்டம்,கோடானத்தம்பட்டி, அரசு பள்ளி மாணவி பானுஸ்ரீ முதலிடமும், 17 வயதுக்குற்பட்ட பிரிவில் கோயம்புத்தூர் தனியார் பள்ளியை சேர்ந்த கார்த்தியாயினி முதலிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!