Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டி20 அரையிறுதி…. இந்தியா- இங்கி ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இந்தியா – இங்கிலாந்து  அணிகள் இதில் மோதுகிறது.  இந்த நிலையில் போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்பு  இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறவுள்ள கயானாவில் மழை பெய்ய 80% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை காரணமாக நேற்றைய பயிற்சியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி. மழையால் போட்டி கைவிடப்பட்டால் இந்தியா (தொடரில் பெற்ற அதிக வெற்றியால்) இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய நேரப்படி இரவு 12.10 மணிக்குள் போட்டியை தொடங்க முடியாவிட்டால் ஆட்டம் ரத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!