Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்…கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு, கட்டுமான தொழிலாளர்கள் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், பெண்களுக்கு 50 வயதில் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடு வழங்கும் திட்டத்தை எளிமைப்படுத்தி வருடத்திற்கு பத்தாயிரம் வீடுகள் வழங்கப்படும் என்ற பிரதம மந்திரியின் அறிவிப்பை உறுதி செய்ய வேண்டும்.  பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க மறுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் இன்று சாரல் மழை பெய்து வரும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மழையில் நனைந்த படியும், குடை பிடித்த படியும் ஏராளமானோர்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!