Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் காங்., எம்பி விஜய் வசந்த் கோரிக்கை…..

இன்று தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்   ஆர். என். சிங்கை காங்கிரஸ் எம்பி வசந்த் சென்னையில் சந்தித்தார். பின்னர் இரணியல் ரயில் நிலையத்தை ஒட்டி ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தற்போது திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கு நடைமேடைக்கு மிக அருகில் இருப்பதால் அங்கிருந்து கிளம்பும் தூசு மற்றும் மாசு பொருட்கள் பொதுமக்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் என தெரிவித்தார். இந்த ஜல்லி கிடங்கை நடைமேடையில் இருந்து சற்று தூரம் தள்ளி அமைக்க வேண்டும் எனவும், இந்த பிரச்சனைக்கு சமூக தீர்வு காண்பதற்காக ரயில்வே துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்வதற்கு அனுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!