Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொன்மலை ரயில்வே பணிமனையில் சுதந்திர தின விழா

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை வாயில் (கலையரங்கம் ) எதிரில்  இன்று  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  பணிமனை  முதன்மை மேலாளர் சந்தோஷ் குமார் பத்ரா  தேசிய கொடியை ஏற்றி வைத்து,  சிறப்பாக பணிபுரிந்த  அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவில்  பள்ளி மாணவர்கள், தொழிலாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பணிமனை வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.விழாவில் மாணவர்கள், தொழிலாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவில் உயர் அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள், ரயில்வே பள்ளி மாணவர்கள் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!