Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்..

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் கால பைரவருக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி முன்னிட்டு காலபைரவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர்,

எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக காலபைரவருக்கு பல்வேறு வண்ண மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி பூஜையைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!