Skip to content

முதல்வர் ஒப்பந்தம் செய்த ஜாபெல் நிறுவனம்….. மணப்பாறையில் அமையும்….. அமைச்சர் மகேஸ்

  • by Authour

அமைச்சர் அன்பில் மகேஷ் கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஜாபெல் என்ற எலக்ட்ரிக்கல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமையவிருக்கிறது, இதன் மூலம் 5,000 மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிகப்படியான பெண்களுக்கு வேலைவாய்ப்பு இதில் கிடைக்கும். இதுவரை ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த எலக்ட்ரிக்கல் தொழிற்சாலை திருச்சியில் வருவதால் திண்டுக்கல் , தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகம் பயன் பெறுவார்கள்.

ஜாபெல் என்ற தொழிற்சாலை ஆப்பிள்,HCL உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பொருட்கள் தயாரிக்க கூடிய நிறுவனமாக உள்ளது. மார்ச் 2026-ம் ஆண்டு இந்த தொழிற்சாலை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பணம் கொடுப்பேன் என்று ஒன்றிய அமைச்சர் கூறுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியை பெற வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. கொள்கை என்று வந்தால் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். மேலும் ஒன்றிய அரசு தங்களுடைய சித்தாந்தத்தை எந்த வகையிலாவது உள்ளே கொண்டு வர வேண்டும் என்று கருதிதான் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!