Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலக கராத்தே போட்டி….கோவை வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம்

7 வது உலக கோஜிரியோ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில்  கடந்த 4 ந்தேதி நடைபெற்றது.உலகம் முழுவதும் சுமார் 26 நாடுகளில் இருந்தும் 1200 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அணி சார்பாக கோவையை சேர்ந்த ஆறு பேர் கலந்து கொண்டனர்..

கட்டா,குமித்தே,குழு என வயது மற்றும் எடை பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் கோவையை சேர்ந்த மஹா கவுரி,என்ற மாணவி ,கைலாஷ்,சுனில், தர்னீஷ்,நந்தகுமார்,ஆகாஷ்  ஆகிய ஆறு பேரும்
அந்தந்த போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களைப் பெற்று அசத்தினர்.

இதே போல கோவையில் இருந்து சென்ற ஷிஹான் பிரமோஷ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் ஆஸ்திரியாவில் நடத்தப்பட்ட உலக கோஜூரியோ கராத்தே கூட்டமைப்பு நடுவர் தேர்வில் வெற்றிபெற்று, உலக கராத்தே  அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்,

இந்நிலையில் உலக அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகள் மற்றும் உடன் சென்ற அதிகாரிகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்ந்த வீரர்,வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!