Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொட்டகையில் தீ……..குன்றக்குடி யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோவில் யானை சுப்புலட்சுமி(53)  அங்குள்ள ஓலை கொட்டகையில் கட்டப்பட்டிருக்கும். நேற்று முன்தினம் இந்த கொட்டகையில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் யானை சுப்புலட்சுமி பலத்த காயம் அடைந்தது.   தீ உடனடியாக அணைக்கப்பட்டு,  சுப்புலட்சுமிக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு  சுப்புலட்சுமி உயிரிழந்தது.  யானை கட்டப்பட்டிருந்த கொட்டகையில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பதை  போலீசார் விசாரித்து வருகிறார்கள். யானை கொட்டகையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மறைத்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமிக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மரியாதை செலுத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!