Skip to content

குடும்ப பிரச்னை…. போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார்(46) இவர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கிருத்திகா மன்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அசிஸ்டெண்டாக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு திருமணம் ஆகி சச்சின், அஸ்வின் என்ற இரண்டு மகன்கள் உள்ளார்.

இந்த நிலையில் சத்தியமங்கலம் STF -ல் பணிபுரியும் தலைமை காவலர் அருள்குமார் தற்செயல் விடுப்பில் தனது சொந்த ஊரான நொய்யல் குறுக்கு சாலைக்கு வந்துள்ளார் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தனது அறையில் மின்விசிறியில் சால்வையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

அதனைப் பார்த்து கிருத்திகா கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து கீழே இறக்கி பார்த்த பொழுது அருண்குமார் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!