ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மொக்வா என்ற இடத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 300 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 150 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் வடக்கு நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் மரப் படகு ஒன்று சுமார் 300 பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. 100 பேர் பயணிக்கக்கூடிய படகில் 300 பேர் பயணித்தால் படகு நீருக்குள் மூழ்கியது. படகில் பயணித்த பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நீருக்குள் மூழ்கினர்.
தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு நடவடிக்கையில் இதுவரை 150 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
