Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சலூனில் சர்பராஸ் கானுக்கு ட்ரிம்மரால் முடிவெட்டி விட்ட முகமது சிராஜ்!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி, அங்கு நடைபெறவுள்ளத் தொடருக்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பயிற்சி மற்றும் போட்டிகளின் தீவிரத்திற்கு இடையே, இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு நேரங்களை ஜாலியாகவும் நட்போடும் செலவழித்து வருகின்றனர்.

கொழும்புவில் உள்ள பிரபல சலூன் ஒன்றிற்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான சர்பராஸ் கான், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் முடிவெட்டுவதற்காகச் சென்றனர். அப்போது அவர்களுடன் சென்ற வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், திடீரென ஹேர்ஸ்டைலிஸ்ட்டாக மாறி ட்ரிம்மரைக் கையில் எடுத்தார். சலூன் ஊழியரிடம் ட்ரிம்மர் இயக்கும் முறையைக் கேட்டுத் தெரிந்துகொண்ட சிராஜ், சர்பராஸ் கானுக்கு ஆர்வத்துடன் முடிவெட்டி விட்டார். அதே சலூனில் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரும் முடிவெட்டிக் கொண்டனர். இந்திய வீரர்களின் இந்த ஜாலியான அட்டைக்காசமும், சிராஜ் – சர்பராஸ் கான் இடையிலான இந்த அன்பான நட்பும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

error: Content is protected !!