Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீசார் லஞ்சம் கேட்டால் உடனே புகார் பண்ணலாம்!- உதவி எண் அறிவிப்பு

தமிழகத்தில், த.வெ.க., ஆட்சிக்கு வந்தபின், லஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் நேற்று முன்தினம், துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், ‘காவல் நிலையங்களுக்கு புகார் தர வருபவர்களிடம், போலீசார் லஞ்சம் பெற்றால் வழக்கு பதிவு செய்யப்படும்; விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதியானால் கைது நடவடிக்கை பாயும்; அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்’ என, கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக, ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியதாவது: காவல் துறையில் உள்ளவர்கள் லஞ்சம் கேட்டால், 78717 23000 என்ற மொபைல்போன் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

புகார்மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.புதிதாக தொடங்கப்பட்ட பிரிவில், கூடுதல் எஸ்.பி., குமரேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தேவைப்பட்டால், கூடுதலாக போலீசாரும் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார். சென்னை மாநகரில் புதிய பிரிவின் செயல்பாட்டை பார்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ள காவல் துறையிலும், படிப்படியாக ஊழல் ஒழிப்பு பிரிவு தொடங்கப்படும் என, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!