Skip to content

சஞ்சீவ் கண்ணா…. உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர் டி. ஒய்.  சந்திர சூட். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 11ம் தேதியுடன் முடிவடைகிறது.  எனவே புதிய தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது.. இந்த நிலையில்  சந்திரசூட்,  தனக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி   சஞ்சீவ் கண்ணாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என சட்டத்துறைக்கு மரபுபடி பரிந்துரை செய்துள்ளார். எனவே சஞ்சீவ் கண்ணா அடுத்த தலைமை நீதிபதியாக  நியமிக்கப்படுவார். சஞ்சீவ் கண்ணா டில்லியை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தையும் நீதிபதி ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!