சென்னை அண்ணா நகர் நெல்லை காபி ஷாப்பில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்
சென்னை அண்ணா நகர் 13வது பிரதான சாலை 6 வது அவென்யுவில் செயல்பட்டு வரும் நெல்லை காபி ஷாப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது தீ மள மள பரவி கட்டிடம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எறிந்தது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும்

மீட்பு பணித்துறை வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணைகள் தெரிய வந்தது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானது இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் காயமோ உயிர் சேதமும் ஏற்படவில்லை மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
