கோவை மாவட்டம் லக்கிபாளையம் கிராமத்தில் நிலவி வரும் வறட்சியை போக்கவும், மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் கழுதைகளுக்கு திருமணம் செய்துவைத்தனர். பெண் கழுதைக்கு புடவை, வளையல் அணிவித்தும், ஆண் கழுதைக்கு வேட்டி, துண்டு கட்டி அலங்கரித்தும் சுப்பிரமணிய சுவாமி கோவியில் வைத்து மேளதாளங்களுடன் தாலி கட்டி இத்திருமணம் நடத்தப்பட்டது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று கழுதைகளுக்கு திருமணம் நடத்தியபோது மழை பெய்ததாக தெரிவித்த கிராம மக்கள், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கம்பங்கூழ் வழங்கி உபசரித்தனர்.
