Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ட்ரம்ப் வெற்றி எதிரொலி.. எலான் மஸ்க் சொத்துக்கள் ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்வு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் வெற்றிக்கு தீவிரமாக பாடுபட்ட எலான் மஸ்க். அந்த வகையில், அவரது ஆதரவை பெற்ற உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்டாவின் பங்குகள் சுமார் 14.75% வரை அதிகரித்துள்ளன.அமெரிக்க பங்குச்சந்தையில் டெஸ்லா பங்கு ஒன்று 288.53 டாலராக உயர்ந்தது. டெஸ்லா பங்கு விலை அதிகரித்ததை அடுத்து எலான் மஸ்க் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. அதன்படி, எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 24.46 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சியில் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான கொள்கைகள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பில் பங்குவிலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எலான் மஸ்க் ட்ரம்பிற்கு ஆதரவாக மேடைகளில் பேசினார். ஒரு கட்டத்தில் டிவிட்டரையே ஒரு பிரசார மேடையாக மாற்றியதுடன் எதிர்க்கட்சியினரைக் கலாய்த்து மீம்ஸ்களை பகிர்ந்தார்.இந்த தேர்தலில் ட்ரம்புக்கிற்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1,000 கோடியை செலவிட்டார். டிரம்பின் வெற்றியால் மஸ்க் மட்டும் ஆதாயம் அடைந்ததில்லை. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், உலகின் இரண்டாவது பணக்காரர், அவரது சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகள் கிடுகிடுவென உயர்வை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!