திருச்சி கே கே நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டை பூட்டிவிட்டு கடலூர் சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் சென்று பிரோ கதவை உடைத்து அதிலிருந்து 4 பவுன் தங்க நகை மற்றும் 2கி வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடி மரம் ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
