Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிரம்பை கொல்ல திட்டமிட்ட ஈரான்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து, அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் தேர்வாகி உள்ளார். ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரசார கூட்டத்தில் மேடையில் பேசிக் கொண்டு இருந்த போது பறந்த வந்த தோட்டா, டிரம்ப் காதில் மேல்பகுதியை உரசிச் செல்ல அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார். அதன் பின்னர் புளோரிடா மாகாணத்தில் கோல்ப் மைதான கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த போது, மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அப்போதும் டிரம்ப் உயிர் தப்பினார். இந்த சம்பவம், அமெரிக்க வாக்காளர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னதாக டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்கா நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரான் துணை ராணுவ குழுவின் ஒரு உறுப்பினர் டிரம்பை கண்காணித்து, கொல்ல முயற்சி செய்துள்ளார். ஈரானை வெளிப்படையாக விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரைக் கொல்ல முயற்சி செய்துள்ளனர். இது குறித்து இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அமெரிக்கா மக்களையும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்ந்த முயற்சி நடக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!