Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்னாள் முதல்வர் ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா….24ம் தேதி அதிமுக கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவனத் தலைவர், எம்ஜிஆரின் துணைவியாரும், முன்னாள் முதல்வருமான ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்,  வரும் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில்,`படத் திறப்பு, மலர் வெளியிடுதல், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடைபெற உள்ளன.

எம்ஜிஆர், ஜானகி ராமச்சந்திரன் ஆகியோருக்கு புகழ் சேர்க்கும் வகையில், அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கலைத் துறையைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், ஜானகி ராமச்சந்திரன் அவர்களுடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!