Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு …. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார்  விசாரித்து வந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

இந்த நிலையில்  கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு  வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என  அதிமுக, பாமக, பாஜக  வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர்  விசாரித்து வந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி  ஐகோர்ட் நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.   சிபிஐயிடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!