நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 4,000-க்கும் மேற்பட்ட நேபாள போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
