கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூத்த வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் கண்ணன் (30) பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் அதேபோல அங்கு சத்யாவதி என்ற பெண்ணும் பயிற்சி வழக்கறிஞராக உள்ளார்.
இந்த நிலையில், கண்ணனுக்கும், சத்யாவதியின் கணவர் ஆனந்திற்கும் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு கைகலப்பாகவும் மாறி இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை கண்ணன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு வெளியே வரும் போது, கண்ணனை வழி மறித்த ஆனந்த் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டித்தள்ளினார்.
இதில், ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்த கண்ணன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
