Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்….. வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. ஊர்க்காவல்படை வீரர் கைது

ஜெயங்கொண்டம் அருகே வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஊர்க்காவல் படை வாலிபரை போலிசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிழக்கு அண்ணா நகரை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி ஜான்கி.(28 )இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. பூமிநாதன் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

விசேஷங்களுக்கு மேளம் அடிப்பதற்காக பூமிநாதன் வெளியில் சென்று விட்டார்.  வீட்டில் தனியாக இருந்த ஜானகி, நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஊர்க்காவல் படையில் பணிபுரியும் சிவசண்முகம் என்பவர், ஜானகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது வெளியில் ஓடிவந்த ஜானகி சத்தம் போட்டு உள்ளார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்த போது, சிவசண்முகம் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மாமியார் மருதாம்பாள், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் போலீசார் சிவசண்முகம் மீது  போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!