Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை… வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது..

தஞ்சை விளார் சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் பசுபதி மகன் மணிகண்டன் (21). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. மர்மநபர் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மணிகண்டன் தஞ்சை தெற்கு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த மூங்கில்குமார் மகன் சந்திரமோகன் (19) என்பதும், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!