Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில்……சுற்றுச்சுசூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்,வனம்
மற்றும் காலநிலை  மாற்றத்துறை அறிவுறுத்தல் படி சுற்றுச்சூழல் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக  100மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி புதுக்கோட்டையில் நடந்தது.

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து . மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ சண்முகம்  கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஆ. ரமேஷ், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர்  கு. செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்  ராஜேந்திரன், ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி ,மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளுவன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் முதல்அமைச்சரின் பசுமை புத்தாக்க திட்ட தோழியர்  ஜெரோலின் மேரி,புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர்  குரு மாரிமுத்து, அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர்  இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!