Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை விமான நிலைய 24மணி நேர சேவை, நாளை தொடக்கம்

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவையையொட்டி முதல் சேவையாக இரவு 10.45 மணிக்கு மதுரை – சென்னைக்கு இயக்கப்படுகிறது என, விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என  மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்தது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மதுரையில் இருந்து இரவு 10.45 மணிக்கு மேல் கடைசி இண்டிகோ விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே சென்னையில் இருந்து 8.45 மணிக்கு வந்து மீண்டும் மதுரையிலிருந்து 9 மணிக்கு கடைசி விமானம் சென்றது. 24 மணி நேர சேவைக்கு பிறகு முதல் விமானமாக சென்னையிலிருந்து 9.25 மணிக்கு புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது.
பின்னர் மீண்டும் பயணிகளுடன் 10.45-க்கு மேல் மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 12.05 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதன்பின், இரவு சுமார் 2.15 மணிக்கு மேல் பினாங்கிற்கு புறப்பட்டு செல்கிறது. இதற்கு முன்பு இரவு 9.05 மணிக்கு மேல் மதுரையில் இருந்து விமான சேவை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!