Skip to content

சீர்காழி அருகே மாமனாரை கொலை செய்த மருமகன்….. பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (60). மாற்றுதிறனாளியான இவர் வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் பணி செய்து வருகிறார். இவரது மகள் ஆஷா (28), இவரது கணவர்  ராமநாதபுரம் மாவட்டம் நாச்சி கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (30). இந்நிலையில் கொத்தனார் வேலை செய்து வரும் கார்த்தி கடந்த சில மாதங்கள் மாமனார் ரவிக்குமார் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கார்த்தி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ரவிக்குமார் கார்த்தியை ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதில் கார்த்தி மாமனார் ரவிக்குமாரை தள்ளிவிட்டதில் அருகில் இருந்த அம்மிக்கல்லில் ரவிக்குமார் விழுந்ததில் தலையில் படுகாயம்  அடைந்து ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் சீர்காழி போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தப்பி ஓடிய கார்த்தியை போலீசார் சுத்தி வளைத்து கைது செய்தனர். மாமனாரை கொலை செய்த மருமகன் இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!