Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 1ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த 75 வயதான பழனத்தாள் என்ற மூதாட்டி இடம் கூட்ட நெரிசலில் மர்ம நபர் 5 பவுன் நகையை திருடி உள்ளனர்.இதுகுறித்து பழனாத்தாள்

கோட்டூர் காவல் நிலைய காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் இந்ததிருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த 35 வயதான மது என்ற பெண்ணை கைது செய்தனர். இவர் மீது காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நகை திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!