Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

சேலம்  மாநகர் மாவட்ட  அதிமுக செயலாளராக இருந்த  முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் அந்த பொறுப்பில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக   மாநகர் மாவட்ட பொறுப்பாளர்களாக  முன்னாள் எம்.எல்.ஏ.  எம்.கே. செல்வராஜ்,  பகுதி செயலாளர்  ஏ.கே. எஸ்.எம். பாலு ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கான  அறிவிப்பை  அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட  வெங்கடாசலம், 2 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர்.  இவர் தற்போது  எடப்பாடியின்  எந்த உத்தரவையும்  செயல்படுத்துவதில்லையாம்.  குறிப்பாக பூத் கமிட்டி கூட  அமைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து எடப்பாடிக்கு புகார் சென்ற நிலையில், அவர்  வெங்கடாசலத்தை  அழைத்து விசாரித்தாராம். அதற்கு பின்னரும் அவர்  எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை  என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்தே  வெங்கடாசலம் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!