Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்….

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அ.தி.மு.க எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் பேசுகையில், விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கரண்ட் பட்டியலில் உள்ளவர்களுக்கு கரண்ட் கிடைக்க தாமதம் ஆகிறது. விரைவாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா” என்றார்.

இதற்கு பதில் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அனுமதி அளித்து, இதில் 1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

error: Content is protected !!