Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்ற நபர் கைது…. 2 பேர் எஸ்கேப்…

திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் உள்ள ரெயில்வே புதர் பின்புறம் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் மக்களிடம் பரிசு தொகை கிடைக்கும் என கூறி ஏமாற்றி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் சாமி (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!