மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதான வழக்கறிஞரும், மாணவர் சங்கத் தலைவருமான நிதின் ஸ்ரீபத் தாம்பே, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நடுரோட்டிலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வாகனத்தை ஓட்டியபடியே நிலைதடுமாறி சாலையில் விழுந்து உயிரிழந்த நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
