Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை… அமைச்சர் பெயரை சொல்லி நிலஅபகரிப்பு- புகார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தைச் சார்ந்தவர் சிவப்பிரகாசம், இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர்.இவரது தந்தை பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 7 ஏக்கர் நஞ்சை நிலம் உள்ளது.இந்த நிலத்தை பாலகிருஷ்ணன் தனது மகன் சிவப்பிரகாசத்திற்கு தானம் அளிப்பதாக செட்டில்மெண்ட் பத்திரம் அளித்துள்ளார்.இவர்களது நிலத்திற்கு பக்கத்தில் திமுக மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளரான ரவி சுந்தரம் என்பவரது நிலம் உள்ளது. இந்நிலையில் சிவபிரகாசத்தின் நிலம் தனக்கு சொந்தம் என்று சொல்லி குத்தகை பத்திரத்தை காட்டி ரவி சுந்தரம் வழக்கு தொடர்ந்துள்ளார். சார்பதிவாளர் அலுவலகங்களில் பெறப்பட்ட பத்திரப்பதிவுகளின் படி நிலம் சிவபிரகாசத்திற்கு சொந்தமாக உள்ளது.இந்நிலையில் சிவப்பிரகாசத்தில் நிலத்தில் அவரை சாகுபடி செய்ய விடாமல் திமுக பொறுப்பாளரான ரவி சுந்தரம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.திமுக மாவட்ட செயலாளரையும் அமைச்சரையும் தனக்கு நெருக்கம் என்று கூறி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக ரவி சுந்தரம் மீது சிவப்பிரகாசம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்த தனக்கே இந்த நிலையை ஏற்பட்டுள்ளதாகவும்,ஆளுங்கட்சி என்று மிரட்டியை தனது நிலத்தை மோசடியாக பறிக்க நினைப்பதாகவும், தனது மின் மோட்டார்களை அவர் திருடி சென்று விட்டதாகவும்,இது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவித்தால் காவல் நிலையம் எதிரே ரவி சுந்தரத்தின் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்வதாக மிரட்டுவதாகவும் தங்களது பூர்வீக நிலத்தை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
error: Content is protected !!