Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கன்னட மொழிக்கு என்ன செய்தீர்கள்- நடிகர் சிவராஜ்குமார் கேள்வி

தமிழில் இருந்து  பிறந்தது தான்  கன்னடம் என  நடிகர் கமலஹாசன் பேசியதால்,  கர்நாடகத்தில் பிரச்னை  எழுந்துள்ளது.   கமல்ஹாசன் பேச்சை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.  கமல் பேச்சுக்கு  முதல்வர் சித்தராமையா,,  பாஜக தலைவர் விஜயேந்திரா,  மற்றும் கன்னட அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில்,  கன்னட மொழி பற்றி இப்போது பேசுபவர்களுக்கு  நடிகர் சிவராஜ்குமார், பதில் அளித்துள்ளார். அதில் அவர்  கூறியிருப்பதாவது:

எப்போதும் கன்னட மொழி மீது காதல் கொண்டவராக இருக்க வேண்டும். சர்ச்சை எழும்போது மட்டும் குரல் எழுப்பாமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும். நட்சத்திர படங்களை மட்டும் ஆதரிக்காமல் புதியவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். நீங்கள் கன்னட மொழிக்கு  என்ன செய்துள்ளீர்கள்?”  என்று கண்டனம் தெரிவித்தவர்களை பார்த்து சிவராஜ்குமார் கேள்வி எழுப்பினார்.

சிவராஜ்குமாரின் இந்த பேச்சு ,  கன்னட அமைப்பினருக்கு எதிரானதாகவும், கமல் கருத்துக்கு ஆதரவாகவும் பார்க்கப்படுகிறது.

 

error: Content is protected !!