Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் உலா வரும் காட்டுப்பன்றிகள்… பொதுமக்கள் அச்சம்

கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட 41 – வது வார்டு பி.என்.புதூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டுப் பன்றிகள் அதிகமாக சுற்றி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் குட்டிகளுடன் நான்கு காட்டு பன்றிகள் நுழைந்து. அதனை அப்பகுதி பொதுமக்கள் கேட்டை நன்றாக மூடி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத் துறையினர் வருவதற்குள் அந்தப் காட்டு பன்றிகள் மாயமானது. மாநகரில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் அதுவும் குழந்தைகள் விளையாடும் இடங்களில் வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்தக் காட்டுப் பன்றிகளால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு தமிழக அரசும், வனத் துறையினரும் நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு கண்டு பொது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

error: Content is protected !!