Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது..

திருச்சி பொன்மலைப்பட்டி மலை அடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50 )இவர் கடந்த 2ந் தேதி பொன்மலை பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 28) ரவுடி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்.இது தொடர்பாக செல்வகுமார் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்துள்ளனர்.

வாலிபர்  தற்கொலை..போலீசார் விசாரணை

வஉசி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் கௌதம் (வயது 22) இவர் கடந்த 2 ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் மின்விசிறியில் தூக்க மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது தாய் மகேஸ்வரி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கௌதம் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!