தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமான தியாகி அருணாச்சல மன்றத்திற்கு வருகைபுரிந்து மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் இ.எம். சரவணன் மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் கே ஆர் ஆர் ராஜலிங்கம், மாநகர பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார்.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் பேரியக்க கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திடவும், நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் பெறுவதற்கும், வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகளின் பங்களிப்பு குறித்தும் கலந்தாலோசனை வழங்கினார். நிர்வாகிகள் அனைவரும் அமைச்சர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வில் மாநகர் மற்றும் புறநகர் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
