Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வயலில் இறங்கிய அரசு பஸ்.. ஒருவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு அரசு பேருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.பேருந்தை இடைகாலை சேர்ந்த ஓட்டுநர் முருகேஷ் ஓட்டி வந்தார். இந்த பேருந்தானது ஆலங்குளத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் இடைகால் விலக்கு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள விவசாயநிலத்தில் பாய்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் மூன்று பேர்

சாலையில் விழுந்து காயம் அடைந்தனர் .தொடர்ந்து அவர்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் ஸ்டேரிங் என்ட கட்டானதால் இந்த விபத்து நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஜெயலெட்சுமி (வ43) என்ற பெண்மணி பலத்தகாயத்துடன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

error: Content is protected !!