Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நல்ல செய்தி விரைவில் வரும்.. அன்புமணியுடன் பேசியது ரகசியம்- ராமதாஸ்

சென்னை அபிராமபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது. இதற்கு கருணாநிதி உதாரணம்; சக்கர நாற்காலியில் இருந்தபடியே அவர் முதலமைச்சரானார். கருணாநிதி 94 வயது வரை அரசியல் செய்தார். அனைவரும் எதிர்பார்க்கும் நல்ல செய்திகள் விரைவில் வரும். அது சென்னையில் இருந்து வருமா? தைலாபுரம் தோட்டத்தில் இருந்து வருமான என எனக்குத் தெரியாது.

anbumani with ramdass

நான் எல்லா தலைவர்களையும் நேசிப்பவன். பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர். அமித்ஷாவை இதுவரை நான் சந்தித்தது கிடையாது.  கூட்டணி குறித்து இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில்  தெரியவரும். யாருடன் கூட்டணி? எப்போது? ஏன்? என்பதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது. கூட்டணி தேசியக்கட்சியோடும் இருக்கலாம்; மாநிலக் கட்சியோடும் இருக்கலாம்.  புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு அப்போது வாழ்த்து சொன்னேன்; இப்போதும் வாழ்த்து சொல்கிறேன்.  அன்புமணியுடன் நான் பேசியது ரகசியம்; ரகசியத்தை சொல்லக்கூடாது.” என்று அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!