Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை பாரதியார் மகளிர் குழுவுக்கு மாநில விருது- உதயநிதி வழங்கினார்

தமிழக முதல்வராக இருந்து கலைஞர் கருணாநிதி   மகளிர் சுயஉதவிகுழுக்களை தொடங்கினார். பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக இதனை தொடங்கி வைத்தார்.இதன் மூலம் பெண்கள் இன்று  பயன்பெற்று வருகிறார்கள்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாடுகளை தமிழக அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதுடன், சிறந்த குழுக்களை தேர்வு செய்து ஆண்டுதோறும்   மணிமேகலை விருது வழங்கி கவுரவித்து  வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சி க. புதுப்பட்டி பாரதியார் மகளிர் சுய உதவி குழு மாநில அளவில் சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதையொட்டி  பாரதியார் மகளிர் சுயஉதவி குழுவுக்கு,  தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ,  மணிமேகலை விருது வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!