Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி

கேரளா மாநிலம் , பாலக்காடு முண்டூர் பகுதியில் உள்ள குடியிருப்பிற்குள் அடிக்கடி உலா வரும் ஒற்றை காட்டு யானை அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அங்கு மின் வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் முண்டூர் பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை அதே பகுதியில் முகாமிட்டது. அப்போது நள்ளிரவு 3 மணியளவில், சத்தம் கேட்டு வெளியே வந்த அதே பகுதியை சேர்ந்த குமரன் (61) என்பவரை காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டை வெளியே வரமுடியாமல் தவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். காலை 8 மணி வரை அதே பகுதியில் முகாமிட்ட யானையை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் விரட்டினர். இதனிடையே வனத்துறையினரை கண்டித்து அப்பகுதி மக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஏப். மாதம் அதே பகுதியை சேர்ந்த ஆலன் (22) என்ற இளைஞர் பணியை விட்டு விட்டு குடும்பத்துடன் வசிக்க வந்த நிலையில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்ததார். அப்போதே அப்பகுதியில் மின் வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் மேலும் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தால் ஆத்திரமடைந்த மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டனர்.

error: Content is protected !!