Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை அருகே சிறுத்தை தூக்கி சென்ற சிறுமியின் உடல் மீட்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோயில் குடியிருப்பு அருகில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, மோனிகா தேவி தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் மகள் ரோஷினி குமாரி. இவர் வீட்டிற்கு வெளியே தண்ணீர் பிடிக்கும் இடத்தில் நின்றுள்ளார்.அப்போது தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை தாயின் கண் முன்னே சிறுமியை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. வால்பாறை காவல்துறை அதிகாரி மற்றும் வனத்துறை அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டனர்.

error: Content is protected !!