Skip to content

போதை பொருள், மேலும் பல நடிகர்களுக்கு தொடர்பு

  • by Authour

சென்னையில்  கொக்கைன் என்ற போதை பொருள் விற்பனை செய்ததாக  அதிமுக பிரமுகர் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து பிரதீப் என்பவரை கைது செய்தனர். அவர்  பிரசாத்திடம் இருந்து  40 முறை  கொக்கைன்  வாங்கி உள்ளார்.  நடிகர் ஸ்ரீகாந்தும் கொக்கைன் வாங்கியது தெரியவந்தது.

எனவே இன்று அவரை  போதை பொருள் தடுப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  அதில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஸ்ரீகாந்திடம்  திருவல்லிக்கேணி துணை கமிஷனர் நடத்திய விசாரணையில் அவரும் பல தகவல்களை கூறி உள்ளார். அதன்படி  மேலும் பல நடிகர்கள் கொக்கைன்  பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கில் மேலும் சில நடிகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நடிகர்கள் கைது செய்யப்படுவார்களா என்பது  விரைவில் தெரியவரும்.

error: Content is protected !!