Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஏவியேஷன் அகாடமி அஞ்சலி

ஏர் இந்தியா விமானம்  அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளாகி 270 பேர் பலியானார்கள். உலகையே  அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.இந்நிலையில் கோவையை சேர்ந்த ஹாப்ஸ் ஏவியேஷன் எனும் அகாடமி சார்பில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காந்திபார்க் பகுதியில் நடத்தினர். “விண்ணுக்கு ஓர் கடிதம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விமானத்துறையை சேர்ந்த மாணவர்கள் அந்த அகாடமியின் ஊழியர்கள், விமான பைலட்டுகள் ஆகியோர் பங்கேற்று  அஞ்சலி செலுத்தினர். பின்னர் ரோஜாப்பூ மற்றும் வெள்ளை பலூனை கையில் ஏந்தி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
error: Content is protected !!