Skip to content

ஆனி மாத அமாவாசை…. கரூர் சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்.

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய காயத்ரி தேவிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக காயத்ரி தேவிக்கு பட்டாளை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். தொடர்ந்து சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய காயத்ரி தேவிக்கு நடைபெற்ற ஆனி மாத அமாவாசை நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!